சிறுப்பிட்டியில் குங்குலியக்கலய நாயனார் விழா

சிறுப்பிட்டியில் குங்குலியக்கலய நாயனார் விழா சிறப்பாக இடம்பெறவுள்ளது. .

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 05
குங்குலியக்கலய நாயனார் விழா சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயப் பிரதான மண்டபத்தில் எதிர்வரும்
13.08.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ள நிகழ்வில் ஆன்மீகவிருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன்
அவர்கள் கலத்து சிறப்பிக்கவுள்ளார்.

சேக்கிழார் பெருமான் , குங்குலியக்கலய நாயனார் குருபூஜையைத் தொடர்த்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து , ” மனையாளின் மாங்கள நாணை விற்று திருத்தொண்டு அருளிய நாயனார் ” என்னும் விடயப்பொருளில் இளம் சைவப்புலவர் க. கயிலைவாசன் அவர்களின் சொற்பொழிவும் , சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படும்.

அதனை அடுத்து ஆன்மீக விருத்தினர் உரையும்
குருபூஜையை முன்னிட்டு மாணவர்களிடம் நடாத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பாரட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN