இலங்கை மத்திய வங்கியின் சபை கடந்த காலங்களில் எடுத்த சில தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சில சாதகமான பெறுபேறுகளை காணக்கூடியதாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
பணவீக்கம் குறையும்
இந்நிலையில் எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் “பணவீக்கம் 60% ஐ விட அதிகமாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்” எனினும் “அந்நிய செலாவணி பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளது.
அத்துடன் நாட்டில் உள்ள வங்கிகளில் ஓரளவு அந்நிய செலாவணி உள்ளதுடன் இறக்குமதி செலவுவும் குறைந்து ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.