வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குத்தகை செலுத்தாத வாகனங்களை உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் மாத்திரமே மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வாகனங்களை மீளப்பெறுவதற்கு பரேட் சட்டம் (Parate execution) நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பரேட் சட்டம் நடைமுறை
பரேட் அதிகாரத்தின் கீழ், வங்கி அல்லது நிதி நிறுவனம் கடன் தொகை 50 இலட்சம் ரூபாவைத் தாண்டினால் மாத்திரமே வாகனத்தை பறிமுதல் செய்ய முடியும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 173 சந்தர்ப்பங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட 19 அமைப்புகளால் பரேட் சட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.