முல்லைத்தீவில் அதிபரின் மகனின் திருமணத்தால் சர்ச்சை!

முல்லைத்தீவில் அதிபரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை நேரத்துடன் வீட்டுக்கு அனுப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு வெலிஓயாவிலுள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகப் பணிபுரியும் அதிபரின் மகனின் திருமணம் 10ஆம் திகதி நடைபெற்ற நிலையில் மணமகளும் அதே பாடசாலையில் தொண்டர் ஆசிரியையாக இருப்பதாக தெரிய வைத்துள்ளது.

வெளியேறிய மாணவர்கள்
ஆரம்பப் பிள்ளைகள் முற்பகல் 10.30க்கும் மேலும் வகுப்பு பிள்ளைகள் முற்பகல் 11.00 மணிக்கும் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பகல் 11.00 மணியளவில் ஆசிரியர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 11ம் வகுப்பு வரை நடைபெறும் இப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அங்கு சுமார் 20 பேர் ஆசிரியர்களாக பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிவில் பாதுகாப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆறு தன்னார்வ ஆசிரியர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஒருநாள் கூட மாணவர்களை பாடசாலைககு அனுப்புவது சிரமமாக உள்ள நிலையில் பாடசாலையின் இந்த செயற்பாட்டால் பெற்றோர் மிகவும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்

Recommended For You

About the Author: webeditor