மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவசேனை
.. பழித்து இகழ்வாரையும் உடையார் சிவபெருமான்…
1. சிவசேனையில் உள்ளவர்கள் புத்த மயமாக்கலுக்குத் துணை போகிறார்களாம்!
என்ற செய்திகள் ஊடகங்களில் வருகின்றன.
இலங்கை முழுதும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான சிவ சேனைத் தொண்டர்களே,
ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களே, பல்லாயிரக்கணக்கான பாராட்டாளர்களே, சிவ சேனையின் நடவடிக்கைகளால் நெஞ்சம் நெகிழ்ந்து புளங்காகிதம் கொள்ளும் இலட்சக்கணக்கான சைவப் பெருமக்களே,
இச்செய்திகளால் நீங்கள் வேதனை அடையாதீர்.
சில நேரங்களில் இதழ் விற்பனைக்காகவும் சில நேரங்களில் தொகையை வாங்கிக் கொண்டும் பொய்யையும் புரட்டையும் ஊடகங்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றன. இதனால் நீதி மன்ற வழக்குகளையும் சந்தித்து வருகின்றன.
2 குருந்தூர் மலைக்குப் போய் வந்ததைக் கொச்சையாக்கினர். குருந்தூர் மலைமேல் ஆதிசிவன் கோயில் கட்டத் தளம் தேடினோம் என்பதை அவர் அறியார்.
….குற்றம் ஒன்றும் செய்ததில்லை, கொத்தையாக்கினீர்…. என்பார் சுந்தரர் (தி07095002)
3 சங்கமித்திரை கொண்டு வந்ததாக முதலியார் இராசநாயகம் கூறியிருக்கிறார் என்பதே சிவ சேனையின் செய்தி.
உண்மையையும் பொய்யையும்அறியும் நிலையை வாசகருக்கு விட்டோம்.
….குற்றம் ஒன்றும் செய்ததில்லை, கொத்தையாக்கினீர்…. என்பார் சுந்தரர் (தி07095002)
4 பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணின் மரபுகள். தமிழ்ச் சைவ மரபுகள்.
வந்தேறி மரபுகளே மதங்களே, புத்தமும் கிறித்தவமும் முகமதியமும்.
இதை நான் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறேன்.
வந்தேறிகளுக்கு ஆதிகுடிகளின் மரபுகளை மாற்றும் மத மாற்றும் ஒரே இலக்குச் சைவர்களே.
வந்தேறி மரபுகளையும் மதங்களையும் திணிக்க
புத்தத்தைப் புகுத்த
கிறித்தவத்தைப் புற்றுநோயாக்க
முகமதியத்தைப் பால்வினை நோயாக்கத்
தமிழ்ச் சைவ மரபுகளை உடைப்பதற்கு ஊடகங்கள் அவர்களுக்கு துணை போகின்றன.
வந்தேறிகளிடம்
1 அரச ஆட்சி
2 வளர்ந்த நாடுகளின் நிதி
3 எண்ணெய் வள நாடுகளின் செல்வம்
குவிந்து குவிந்து இலட்சப்பானை அருவியாய்க் கொட்டுகிறது.
வற்றாத வளங்களின் பின்னணியில் வந்தேறிகள் விலை போகக்கூடிய ஊடகர்களை விலைக்கு வாங்குகிறார்கள்
சைவ மரபு சாத்தானின் மரபு, உருவ வழிபாட்டு மரபு எனக் கூறி மாற்ற வேண்டும் உடைக்க வேண்டும் சுக்குநூறாக்க வேண்டும் என்போரே வந்தேறிகள்.
சிவசேனைத் தொண்டர்களுக்குப் பாராட்டும் ஒன்றே. பழிச் சொல்லும் ஒன்றே. மரபு காக்கும் பணியே மாறாத பிணி.
புகுத்துவோரையும் புற்று நோயூட்டியோரையும் பால்வினை நோயூட்டியோரையும் வஞ்சினம் கூறி நெஞ்சை நிமிர்த்தி அஞ்சேல் என வழிகாட்டியவர் திருஞானசம்பந்தர்.
பணியைப் பிணியாகக் கொண்டவர்.
இன்று இலங்கைத் தமிழ்ச் சைவர்கள் எதிர்கொள்கின்ற அதே சூழ்நிலையை அன்று அவர் எதிர்கொண்டவர். அவருடைய ஒரே நம்பிக்கை சிவபெருமான்.
சிவபெருமானைப் போற்றுவோர் பாராட்டுவோர் வாழ்த்துச் சொல்வோர் பரவுவோர்.
மாச்சரியத்தால் சினத்தால் பொறாமையால் ஆற்றாமையால் சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லிச் சிவபெருமானைப் பழித்து இகழ்வோர்.
நெஞ்சத்தில் அவரை நினைத்து, பூவும் நீரும் ஆட்டி நாள்தோறும் சிவபெருமான் மீது அன்பைப் பெருக்குவோர்.
போற்றுவாரையும் தூற்றுவாரையும் அன்பைப் பெருக்குவாரையும் தன்னோடு வைத்துக் கொள்பவர் சிவபெருமான், என்கிறார் திருஞானசம்பந்தர்.
பரவு வாரையு முடையார் பழித்திகழ் வாரையு முடையார்
விரவு வாரையு முடையார்… (தி02094005)
சிவபெருமானே நமக்கு வழிகாட்டி. நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம். மரபுகளைக் காப்போம். புகுத்தும் புற்றுநோய் ஆகும் பால்வினையாகும் மரபுச் சிதைப்பாளரை, மத மாற்றிகளை விரட்டுவோம்.
ஓயாது இப்பணி தொடர்வோம்.
….விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் வீணருக்குழைத்துடலம் ஓயமாட்டோம்.. (பாரதியார், விடுதலைப் பள்ளு வரிகள்)