நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற தன்மைகளால், அடிக்கடி ஏற்படும் விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்காக TCT SUPER CENTER அனேகமாக அனைத்துப் பொருட்களுக்கும் 10% தொடக்கம் 30% வரை விலைக்கழிவுகள் வழங்கப்படுவதாக தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா அறிவித்திருக்கிறார்.
எரிபொருள் விலையுயர்வைத் தொடர்ந்து சங்கிலித் தொடராக அதிகரிக்கும் இதர விலையேற்றங்களால் அவதிப்படும் மக்களுக்கு இவ் அறிவிப்பு நிச்சயம் ஆறுதலளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே வறுமை காரணமாக பாடசாலை இடைவிலகல்களிலிருந்து பிள்ளைகளை மீட்க நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பிள்ளைகளுக்கு மாதம்தோறும் கற்றலுக்கான நிதியுதவி பல்லாயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு வங்கிகளூடாக வழக்கப்பட்டு வருவதாகவும், கஷ்டப்பட்ட குடும்பங்களிலிருந்து பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் மாதம்தோறும் நிதி வழங்கப்படுகிறது,
முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்டு வழக்கப்படுகிறது.
இவைதவிர அவசரகால உதவிகள், விபத்துக்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகள், தனியார் மற்றும் அரச நிறுனங்களின் செயற்திட்டங்களுக்கான நிதி, வைத்தியசாலைகளின் மேம்பாட்டுக்கான உதவிகள், வீடமைப்புத்திட்டங்கள் என நீண்டகாலமாக தன்னுடைய சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு உதவிவரும் தியாகி அறக்கட்டளை நிதிய ஸ்தாபகத் தலைவரின் மற்றுமொரு காலச்சூழ்நிலைக்கேற்ற நிவாரணமாகவே பொருட்கள் பண்டங்களுக்கான விலைக்கழிவு அறிவிப்பு விளங்குவதாகச் சொல்லப்படுகிறது .