இலங்கையில் மலையக மக்களின் 200ஆவது ஆண்டு நினைவாக நடைபயணம்-ஆரம்ப நிகழ்வு தலைமன்னாரிலிருந்து ஆரம்பம்.
தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணமாக சென்று மலையக மக்கள் குடியேறிய 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பமாகவுள்ள நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) மாலை 5 மணியளவில் தலைமன்னாரில் ஆரம்பமானது.
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றது. அவர்கள் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணமாகவே வந்து இந்த மலையகப் பகுதியில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதை அடிப்படையாக வைத்து சனிக்கிழமை 29ம் திகதியிலிருந்து (29.07.2023) ஆகஸ்ட் மாதம் 12ந் திகதி வரை தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான ஒரு நடைப்பயணத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமானது.
தலைமன்னார் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட மலையக மக்கள் இலங்கையில் கால் பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
சர்வமத தலைவர்கள் சுடர் ஏற்றி மலர் தூவி குறித்த நினைவு தூபி திறந்து வைத்தனர்.அதனை தொடர்ந்து மக்கள் மலர் தூவி நினைவேந்தலை மேற்கொண்டனர்.
-அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக தலைமன்னார் புனித லோறன்சியா ஆலயத்தை சென்றடைந்தனர்.அங்கு ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமானது.
சனிக்கிழமை (29) காலை தலைமன்னார் புனித லோரன்ஸ் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரை ஆரம்பமாகியது.
சனிக்கிழமை தலைமன்னாரிலிருந்து பேசாலைக்கு 18 கிலோ மீற்றர் தூரம் நடைப்பயணமாக புறப்பட்டு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் தங்குவர்.30ந் திகதி பேசாலையில் இருந்து மன்னார் நகருக்கு 16 கிலோ மீற்றர் தூரம் சென்று மெதடிஸ்த ஆலயத்தில் தங்குவர்
31ந் திகதி மன்னார் நகரிலிருந்து 26 கிலோ மீற்றர் தூரம் முருங்கனுக்குச் சென்று மெதடிஸ்த ஆலயத்தில் தங்குவர்.
01.08.2023 அன்று முருங்கனிலிருந்து 26 கிலோ மீற்றர் தூரம் மடுவுக்கு சென்று மடு ஆலயத்தில் தங்குவர்.2ந் திகதி ஓய்வு,3ந் திகதி மடுவிலிருந்து 23 கிலோ மீற்றர் தூரம் செட்டிக்குக்குளம் சென்று அங்கு புனித.அந்தோனியார் ஆலயத்தில் தங்குவர்,
4ந் திகதி செட்டிக்குளத்தில் இருந்து 26 கிலோ மீற்றர் தூரமுள்ள மதவாச்சிக்குச் சென்று சென்.ஜோசப் ஆலயத்தில் ஓய்வு எடுப்பார்கள்.
5ந் திகதி ஓய்வு, 6ந் திகதி மதவாச்சியிலிருந்து 22 கிலோ மீற்றர் தூரமுள்ள மிகிந்தலை க்குச் செல்வர்.
7ந் திகதி மிகிந்தல வில் இருந்து 18 கிலோ மீற்றர் தூரமுள்ள திறப்ணைக்குச் செல்வர்.
8ந் திகதி திறப்ணையிலிருந்து 22 கிலோ மீற்றர் தூரமுள்ள கெக்கிராவ வுக்குச் சென்று பெப்ரிஸ் ஆலயத்தில் தங்குவர்.
9ந் திகதி கெக்கிராவிலிருந்து 22 கிலோ மீற்றர் தூரமுள்ள தம்புள்ள வுக்குச் சென்று கோல்டன் ஆலயத்தில் ஓய்வு எடுப்பார்கள்.
10ந் திகதி ஓய்வு , 11ந் திகதி தம்புள்ளவில் இருந்து 22 கிலோ மீற்றர் தூரம் உள்ள நாளந்தவுக்கச் சென்று விகாரையில் தங்குவர்.
12ந் திகதி நாளந்தவிலிருந்து 24 கிலோ மீற்றர் தூரமுள்ள மாத்தளை க்குச் சென்று கிறைஸ்ட் ஆலயத்தில் தங்குவார்கள் என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்