கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவு நாள் நினைவேந்தலும் தமிழரசு கட்சியினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (23) ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுத்தனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிளை இளைஞரணியினரால் கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி – நெல்லியடி மத்திய பேருந்து நிலைய பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘இனவாதம் ஒழிக’ என அடையாளப்படுத்தப்பட்ட கொடும்பாவியை இழுத்துச் சென்று தீயிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கைகளில் தீ பந்தங்களை ஏந்தியவாறு பங்கேற்றவர்கள் வேண்டாம் வேண்டாம் இனவாதம் வேண்டாம்.. வேண்டும் வேண்டும் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ‘இனவாதம் ஒழிக’ உருவப் பொம்மைக்கு தீயிட்டு எரியூட்டியிருந்தனர்.
இந்நினைவேந்தலில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் உளிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிளையின் இளைஞரணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.