மகளை சீரழித்த தந்தைக்கு கடூழிய சிறைத் தண்டனை

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பத்து வயதுடைய சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் அவரது தந்தையான 78 வயதுடைய முதியவர் விசாரணைகள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு
இந்நிலையில் சந்தேக நபருக்கு நேற்று புதன்கிழமை (12) கிளிநொச்சி நீதி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

10 வயதுடைய மகளை அடித்து துன்புறுத்தியும், பூவரசம் தடியினால் தாங்கியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்றும் சிறுமியின் வாக்கு மூலம், சாட்சியங்கள், சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் மன்று குறித்த முதியவரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்போது எதிரி சார்பாக ஆஜரான சட்டத்தரணி, குற்றவாளி பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தமையினை கவனத்தில் எடுத்த மன்று குறித்த குற்றவாளிக்கு சிறைச்சாலையில் வைத்திய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இவ்வாறு தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 79 வயதுடைய தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ,பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரணசிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor