வேலணை மத்திய கல்லூரி அதிபர் தெரிவில் முறைகேடு! இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரியில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பத்திரிகை வாயிலாக விண்ணப்பம் கோரப்பட்டு, மே மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டிருந்தது.

நேர்முகத் தேர்வில் தரம் 1 அதிபர் சேவையைச் சேர்ந்த தகுதியான ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில், இன்றைய (07.07.2023) பத்திரிகையில் மீண்டும் வேலணை மத்திய கல்லூரிக்கான அதிபர் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமையானது, வடமாகாண கல்வியமைச்சின் முறையற்ற செயற்பாடாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

தமக்கு வேண்டியவர்களின் தேவைகளுக்காக, வடமாகாண கல்வியின் தர நலன்களைத் தூக்கியெறிந்து, வடமாகாண கல்விப்புலத்தில் நம்பிக்கையற்ற தன்மைகளை உருவாக்கும், வடமாகாண கல்வியமைச்சின் செயற்பாடுகள் வன்மையான கண்டனத்துக்குரியன.

தாம் சார்ந்தோரின் தனிப்பட்ட நலன்களுக்கான, இன்றைய பத்திரிகை மூலம் மீண்டும் பிரசுரிக்கப்பட்ட வேலணை மத்திய கல்லூரி அதிபருக்கான விண்ணப்பம் கோரல் நிறுத்தப்பட்டு, ஏற்கனவே நடைபெற்றிருந்த நியாயமான நேர்முகத்தேர்வின் முடிவின் பிரகாரம் அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகிறது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: S.R.KARAN