அக்கரப்பத்தனை பொலிஸாரால் பதியப்பட்ட பல்வேறு முறைப்பாட்டு குறிப்பேடுகளின் பக்கங்களை எரித்து அழிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டு புத்தகத்தை அழிக்குமாறு சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட், பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம், குறிப்பேட்டை பெண்கள் விடுதிக்கு அவர் எடுத்துச் சென்று பக்கங்களை அகற்றி எரித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
உயர் அதிகாரியிடமும் அனுமதி பெறவில்லை
இந்நிலையில் எந்தவொரு உயர் அதிகாரியிடமும் அனுமதி பெறாமல் பல்வேறு முறைப்பாட்டுக் குறிப்பேடுகளை அழித்த குற்றத்துக்காக இந்த சார்ஜன்ட் நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.