பல்கலைக்கழக சூழலில் காணப்படும் சில அடக்குமுறை நிலைமைகள் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிட்டுள்ளதாக காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்தார்.
சில பல்கலைக்கழகங்களில் கற்றல் செயல்முறை அழுத்தம் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.
பொருளாதார அழுத்தம், மனச்சோர்வு
பல்கலைக்கழகங்களில் கற்றல் செயல்முறை அழுத்தம் அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மருத்துவர், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற காரணங்களால் மாணவர்கள் இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிலைக்கு ஆளாக நேரிடும்.
அதுமட்டுமல்லாது பொருளாதார அழுத்தம், மனச்சோர்வு போன்ற காரணங்களும் இந்த நிலையை மோசமாக்கும்.
அதேவேளை மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே தமது பெற்றோர்கள் அனைத்து வேலைகளையும் செய்வதால் சில பிரச்சினைகளை சமாளிக்கும் திறனை இழக்கின்றனர்.
சில மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசித்ததன் பின்னர், அங்கு காணப்படும் சமூகத்துடன் ஒன்றிணைந்து செல்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
மேலும் பல மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடுதிகளில் தனிமையில் இருப்பதால் பல்வேறு மன உளைச்சலுக்கு முகங்கொடுப்பதாகவும் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் ரூமி ரூபன் தெரிவித்தார்.