பௌத்த பிக்குவால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 11 வயது சிறுமி

11 வயது சிறுமி ஒருவர் பெளத்த பிக்குவால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைதான பௌத்த பிக்கு இன்று (17-05-2023) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி 36 வயதான தமது தாயுடன் கல்கிசை பகுதியிலுள்ள சொகுசு மாடிக் கட்டடத்தில் இருந்துள்ளார்.

இதன்போது அங்குப் பிரவேசித்த 62 வயதான பௌத்த பிக்கு, குறித்த சிறுமியின் தாயாருக்குப் போதைப்பொருளை வழங்கி அவரை மயக்கமடையச் செய்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த 11 வயதான சிறுமியைப் பௌத்த பிக்கு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor