பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய ‘அரிசி’ ரகத்தை படலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வகை பி.ஜி. 381 என்று படலகொட வை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர். ஜே.பி. சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
பிஸ்கட் உற்பத்திக்கு தேவையான அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி வகையை பிஸ்கட் தொழில் துறையில் அதிக வெற்றிகரமான முறையில் பயன்படுத்த முடியும் எனவும் பட்டலகொட அரிசி ஆராய்ச்சி நிறுவனம் இந்த அரிசி வகையை கண்டுபிடித்திருப்பது ஒரு சாதனை எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நெல் ரகம் ஓரளவு மகசூல் தரக்கூடியது, ஏக்கருக்கு நான்கு மெட்ரிக் தொன் மகசூல் தருகிறது. வறண்ட பிரதேசத்திற்கு இந்த நெல் வகை பொருத்தமானது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.