நியூசிலாந்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி சுமார் 90 ஆடி நீளமுள்ள மீன்பிடி இழுவைப் படகு 248 இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தோருடன் சென்றுள்ளது.
இந்நிலையில் குறித்த 248 இலங்கையர்கள் பற்றி இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த 248 இலங்கை தமிழ் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு தொடர்பில் நியூசிலாந்து குடிவரவு அமைச்சு வெளியிட்ட தகவல் ஒன்றில் இந்த படகு பயணம் ஆரம்பித்தமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இலங்கை மற்றும் இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படகுப் பயணங்கள் பற்றிய விபரங்களில், குறித்த இலங்கைப் படகு காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதியன்று சுமார் 90 அடி நீளமுள்ள மீன்பிடி இழுவைப் படகு 248 தமிழ் புலம்பெயர்ந்தோருடன் இந்தியாவின் முனம்பம் அருகே மாலியங்கராவிலிருந்து அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து செல்லலாம் என புறப்பட்டது.
இருப்பினும், படகு மற்றும் படகில் பயணித்த பயணிகள் தொடர்பில் எந்த தகவலும் தெரியவில்லை” என குறித்த அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.