யாழில் இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு

சாவகச்சேரியில் இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தினை பெற மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் சன்மானம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் இலஞ்சமாக கொடுத்த 50 ஆயிரம் ரூபா பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் ரூபா பணம் இலஞ்சம்
நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர், கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜனுக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தினை இலஞ்சமாக வழங்கி தப்பிக்க முற்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடையவர் இலஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன் தர பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor