மின்சார வாகன இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மின்சார வாகனங்களை இறக்குமதிக்கான கால அவகாசம்

அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கு, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஆகஸ்ட் வரை நீடிக்கப்படும்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கு, முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2022 டிசம்பர் 31ஆம் திகதி வரை மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் நாடு படுகுழியில் விழுந்த போது, நாட்டில் குறைந்துபோன அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் முயற்சியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் ஏனைய நபர்களுக்கும் மின்சார வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் இதன்போது வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor