இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில், மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய 3 மாவட்டங்களில் இந்த ஆண்டில் இது வரை 1,057 டெங்கு நோயாளர்கள அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாகாணத்தில் தற்போது இடைக்கிடையே பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் காணப்படுவதாகவும் மக்கள் இயன்றளவு தமது சுற்றாடலை துப்பரவு செய்து நுளம்புகளை இல்லாமலாக்க வேண்டும் என்றும் சுகாதார பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

2023ம் ஆண்டு இது வரையில் கண்டியில் 740 டெங்கு நோயாளர்களும் மாத்தளையில் 273 டெங்கு நோயாளர்களும் நுவரெலியாவில் 44 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் மக்கள் தமது சுற்றாடலை துப்பரவு செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக அவதானமாக இருப்பார்கள் என்றும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor