பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்களைக் கண்டறிய விசேட சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 25ஆம் திகதி வரை இந்த சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் கீழ், மாவட்ட அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்ய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

விசேட அறிவித்தல்
ஆடைகள், மின்சாதனங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் இந்த நடவடிக்கைகளின் கீழ் ஆய்வு செய்யப்படவுள்ளன.

நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தை மீறும் விற்பனையாளர்களுக்கு குறிப்பாக காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor