இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனம் உட்பட உலோகங்கள், கேக், பிளாஸ்டிக், சீஸ், இறப்பர், மரச்சாமான்கள், சோப்புகள், காய்கறிகள், உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor