நாட்டில் தங்கம் வாங்க இருப்போருக்கான மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த வருடம் இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

திடீர் வீழ்ச்சியும், அதிகரிப்பும்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த கிழமைக்கு முன்னதாக 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்திருந்தது.

இந்த நிலையில் குறித்த விலை வீழ்ச்சியானது ஒரு சில நாட்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில் தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,000 ரூபா என்ற மட்டத்தை அடைந்திருந்தது.

இவ்வாறான சூழலில் கடந்த திங்கட்கிழமை முதல் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் சரிவு பதிவாகி வருகிறது.

இன்றைய நிலவரம்
அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 151,800 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140,000 என்ற பெறுமதிக்கு திடீரென குறைந்த போது தொடர்ந்தும் தங்கத்தின் விலை குறையும் என எண்ணி தங்க ஆபரணம் வாங்குவதற்காக காத்திருந்தவர்களுக்கு மீண்டும் பழைய விலைக்கே தங்கத்தின் விலையானது உயர்ந்தமை அதிர்ச்சியளித்திருந்தது.

எனினும் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றமை தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும்.

Recommended For You

About the Author: webeditor