கர்ப்பிணி பெண்களுக்குக்கு உதவ முன்வரும் அமெரிக்க நிறுவனம்

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முகங்கொடுத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசரமாகத் தேவையான 2 தொன் ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்க அமெரிக்கெயார்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் குழந்தைகளின் பிறப்பு விளைவுகளை மேம்படுத்தவும் 16,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையின் பிரகாரம் கர்ப்பிணிப்பெண்களுக்கான போசணைத்தேவையைப் பூர்த்திசெய்வதற்கு சுகாதார அமைச்சுக்குப் பல்வேறு முக்கிய போசணைப்பதார்த்தங்கள் தேவைப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சுகாதாரத்துறைசார் உதவி வழங்கலை இலக்காகக்கொண்டு செயற்பட்டுவரும் அமெரிக்க நிறுவனமான ‘அமெரிக்கெயார்ஸ்’, அமைப்பின் இவ்வுதவி பெரிதும் பயனளிப்பதாக அமையும் என்றும் வெளிவிவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor