பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொழில் தேவை
மேலும் தெரிவிக்கையில்,“பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை பெற்றுக்கொடுக்க அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

நாட்டில் காணப்படுகின்ற தொழில் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களது பிள்ளைகளை தொழில் கல்வியூடாக தகுதியுடையவர்களாக மாற்றுவதற்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும்.

தொழில் தகுதியுடையவர்களாக பிள்ளைகளை மாற்ற வேண்டுமாயின் முதலில் பெற்றோரிடத்தில் மாற்றம் வரவேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor