இலங்கையில் ஏ.டி.எம் (ATM) இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகிய ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவங்களை தடுக்கவே இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் கம்பளை நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஆயுதங்களுடன் வந்த சிலர், தானியங்கி (ATM) இயந்திரத்தினை கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.