மட்டக்களப்பு ஓட்டமாவடி அரசாங்க வங்கி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகைகளை மீட்க சென்றவர் அதிர்ச்சி
நகைகளை அடகு வைத்து வங்கியில் தங்கக் கடனைப் பெற்ற நபர் ஒருவர், நகைகளை மீட்பதற்கு முயற்சித்த போது நகைகள் காணாமல் போனமாய் தெரியவந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வங்கி முகாமையாளர் தலைமை அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 12 பேர் அடகு வைத்த நகைகளும் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது.
2020 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தங்கக் கடனுக்காக அடகு வைக்கப்பட்ட நகைகள் இவ்வாறு காணாமல் போனதாக சிஐடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நகைகள் தொடர்பில் வங்கி முகாமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த புகாரில், நகைகள் வைக்கப்பட்டிருந்த லொக்கரின் 2 சாவிகள், வங்கி ஊழியர்கள் இருவரின் பிடியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் போன நகைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனி குழுவொன்றை மட்டக்களப்புக்கு அனுப்ப உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.