யாழில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடன ஆசிரியையாக கடமையாற்றும் இளம் குடும்பப் பெண் ஒருவர் பிரசவ வலியின் போது கஞ்சா பாவித்துவிட்டு தனியார் வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆசிரியையின் கணவர் பிரபல நகை வியாபாரி என்றும், அவரே தனது மனைவி கஞ்சாவுக்கு அடிமையாக இருந்தவர் எனவும் கூறப்படுகின்றது
கணவர் போதைக்கு அடிமையானவர்
ஆசிரியை தனது பிரசவத்திற்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கஞ்சாவுக்கு அடிமையான நிலையில் இருந்துள்ளதை தாதியர்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து அது தொடர்பாக மகப்பேற்று நிபுணரிடம் தெரிவித்துள்ளனர். அங்கு உடனடியாக வந்த நிபுணர் ஆசிரியையை பரிசோதித்த பின்னர் மிகவும் பாதுகாப்பான மகப்பேற்றை செய்து முடித்துள்ளார்.
அதன் பின்னர் ஆசிரியையிடம் மேற்கொண்ட விசாரணையில், கணவர் போதைக்கு அடிமையானவர் என்றும் அவரின் மூலம் தானும் போதைக்கு அடிமையானதாக ஆசிரியை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக குறித்த வைத்தியநிபுணர் ஆசிரியை மற்றும் கணவனை அழைத்து போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்திற்கு செல்வதற்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதேவேளை அண்மைக்காலமாக யாழில் போதைப்பொருள் பாவனை இளையோரிடையே வெகுவாக அதிகரித்துள்ளதுடன், இதனால் மரணங்களும் இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் இருந்தால் மட்டுமே நம் எதிர்கால சந்ததியை போதை எனும் அரக்கனில் இருந்து பாதுகாக்க முடியும்.