கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் முஸ்தபா இராஜினாமா செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹிருணிகா பிரேமச்சந்திர
இதேவேளை, முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க, இம்முறையும் மேயர் பதவிக்கு போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிய போதிலும், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சமகி பலவேகவில் இருந்து போட்டியிடவுள்ள முஜிபுர் ரஹ்மான் இந்த தீர்மானத்தில் சற்று தயக்கம் காட்டுவதாகவும், இவ்வாறான நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை நியமிக்க ஜலானி பிரேமதாசவின் ஆதரவுடன் சிலர் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது