யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலிக்கொடி செய்து ஏமாற்றிய நபர் ஏழு வருடங்களிற்கு பின்னர் கைது!

யாழில் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி, மற்றும் கொடி செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு தாலி மற்றும் அதற்கான கொடி என்பவற்றை ஐந்தரை பவுணில் செய்தவற்கு சந்தேகநபரிடம் பணம் கொடுத்து தாலி மற்றும் கொடியினை செய்து பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொலிஸில் முறைப்பாடு
7 வருடங்களின் பின்னர் அதவது கடந்த சில தினங்களுக்கு முன்னரே தமது தாலி மற்றும் கொடி என்பவை தங்கம் அல்ல பித்தளை என்பதனை கண்டறிந்துள்ளனர்.

அது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைக்காக தெல்லிப்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை யாழில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தங்கத்திற்கு பதிலாக பித்தளையில் தாலி மற்றும் கொடி செய்து கொடுத்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor