பிரான்சில் தடைப்பட இருக்கும் முக்கிய சேவை

பிரான்ஸில் அன்றாட தபால் சேவைகள் தடைப்பட உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

68 பிராந்தியப் பகுதிகளிற்கு தபால் சேவைகள் தடைப்பட உள்ளன. இந்த 68 பிராந்தியப் பகுதிகளிற்கு (territoire) எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அன்றாட தபால் விநியோக சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றன.

மிகவும் சொற்பமான தபால்களே இந்தப் பிராந்தியப் பகுதிகளிற்கு விநியோக சேவைகள் வாரத்திற்கு மூன்று தடவைகள் மட்டுமே விநியோகிக்கப்பட உள்ளன.

ஆனாலும் மிகவும் அவசரக் கடிதங்கள் மற்றும் பொதிகள் உடனடியாக விநியோகிக்கபப்படும் எனவும், நிறுவனங்களிற்கான சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும், பிரான்ஸின் தபால் சேவைகள் உறுதியளித்துள்ளன.

பிரான்சின் பொதுமக்களிற்கான பொதுச்சேவைகள் இப்படி குறைக்கப்பட்டு மாற்றீடு முறையில் மட்டுமே வழங்கப்படுவது தற்போது வழமையாகி உள்ளது. இதற்கு தேசிய மருத்துவக் காப்பீடும் விதி விலக்கல்ல என குறிப்பிடப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor