நாட்டில் மீண்டுமொரு போராட்டம் வெடிக்கும் அபாயம்

இந்த ஜனவரி மாதத்தில் இருந்து மின் கட்டணத்தை அதிகரிக்க அரசு எடுத்திருக்கும் தீர்மானம் சட்ட விரோதமானது அரசியல் அமைக்கு முரணானது. எனவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் மி்ன் கட்டணம் அதிகரிக்கப்படுமானால் பாரிய மக்கள் போராட்டம் வெடிக்குமென என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள 43ஆவது படையணி மத்திய நிலையத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை
‘மின்சார சபை சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் மின் கட்டண அதிகரிப்பு ஏற்புடையது இல்லை.

இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை. கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றுவதற்கு இந்த தரப்புக்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மின்சாரக் கட்டணத்தை அறிவிப்பதற்கான முழு அதிகாரமும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.”

Recommended For You

About the Author: webeditor