சட்டக்கல்லூரிக்கான நுழைவு பரீட்சை கட்டணம் அதிகரிப்பு!

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை சட்டக் கல்விச் சபை அதிகரித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 6,000 ரூபாவாக இருந்த பொது நுழைவுப் பரீட்சைக்கான கட்டணம் 9,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்படி, நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு சட்டமாணி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சட்டக் கல்லூரியில் இணைவதற்கான கட்டணம் 75,000.

இது தவிர நடைமுறை பயிற்சி வகுப்பு கட்டணம், விரிவுரைகள், நூலகங்கள் என பல கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor