ஜீவனி’க்கு தட்டுப்பாடு!

மருத்துவ சேவைகளை நடத்துவதற்கு தேவையான மருந்துகள், பிற உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டி கராப்பிட்டிய உட்பட பல முக்கிய வைத்தியசாலைகளில் கூட நோயறிதலுக்கான அத்தியாவசிய ஆரம்ப பரிசோதனையான முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனையும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் கிடைக்காததே இதற்குக் காரணம் என அறியப்படுகின்றது.

சில வைத்தியசாலைகளில் இயந்திரங்களுக்குப் பதிலாக பழைய முறைகளில் முழுமையான இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக காய்ச்சலுக்கான கிருமிகளை கண்டறியும் சிஆர்பி இரத்தப் பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கூட மேற்கொள்ளப்படுவதில்லை என சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

தட்டுப்பாடு
இதற்கிடையில் நோயாளிகள் நீரிழப்புக்கு ஆளாகாமல் இருக்க மருத்துவமனைகள் உயிர் காக்கும் பானமான ‘ஜீவனி’ கூட வழங்க முடியாத நிலையாக உள்ளது.

இதுவரை நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட ஜீவனி பானம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஜீவனி கூட வைத்தியசாலைகளுக்குக் கிடைக்காதது ஏன் என்பது பிரச்சினைக்குரிய விடயம் என சுகாதாரத் துறை தொடர்பான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor