குறைந்த விலையில் ஜ்போன் வழங்குவதாக கூறி மோசடி

குறைந்த விலையில் ஐபோன்களை வழங்குவதாகக் கூறி 500 பேரிடம் இருந்து 50 மில்லியன் ரூபாவை மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அந் நபர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 15, மாதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதான சந்தேக நபர் இருவரினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் புகார்களில் சந்தேக நபர் 7.5 மில்லியன் ரூபாவிற்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மொபைல் போன்கள் தருவதாக உறுதியளித்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸில் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இருப்பதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்படும் போது இதேபோன்ற சம்பவம் தொடர்பில் பிணையில் இருந்ததாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரின் வர்த்தகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பணியகம் அவர் ஒரு வருட காலப்பகுதிக்குள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor