தற்போது சந்தையில் ஒரு கிலோ ஏலக்காய் விலை 12000 ரூபா முதல் 14000 ரூபா வரை அதிகரித்துள்ளது.
நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ உலர் ஏலக்காயை பதப்படுத்த சுமார் ஆறு கிலோ பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ பச்சை ஏலக்காயின் விலை தற்போது 7000 ரூபா முதல் 8000 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இந்நாட்டில் வருடாந்தம் சுமார் 30 மெட்ரிக் தொன் ஏலக்காய் நுகரப்படுகிறது.
மேலும் உற்பத்தி குறைந்துள்ளதால் ஏலக்காய் உற்பத்திக்கு அதிக கேள்வியும் தேவையும் ஏற்பட்டுள்ளதாக, ஏலக்காய் விவசாயிகள் கூறுகின்றனர்.