தேசிய சம்பியனாகி கல்குடா மண்ணுக்கு பெருமை சேர்த்த ASSPEK ACADEMY

பந்து பேட்மிண்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹோமாகம வில்ப்ரெட் சேனாநாயக மைதானத்தில் கடந்த 10,11.12.2022ம் திகதிகளில் தேசிய ரீதியில் இடம்பெற்ற 4வது இளையோர் தேசிய மட்டப்போட்டியில் கல்குடா ASSPEK அகடமி B அணியினர் வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கல்குடா ASSPEK அகடமியின் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரு அணிகளாகக் கலந்து கொண்டதுடன், அதில் ASSPEK A அணியினர் மூன்றாமிடத்தையும் ASSPEK B அணியினர் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்று சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ம் ஆண்டிற்குப் பிறகு தேசிய மட்டப்போட்டியில் கல்குடா மண்ணுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

இவ்வீரர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தொடர்தேர்ச்சியாக பயிற்சிகளை வழங்கி போட்டிகளில் கலந்து கொள்ளச்செய்து நெறிப்படுத்தி இவ்விலக்கை அடைய பிரதான காரணமாக பந்து பேட்மிண்டன் தேசிய சம்மேளனத்தின் வட கிழக்கு மாகாண இணைப்பாளரும், ASSPEK அகடமியின் பணிப்பாளருமான ALM.இர்பான் அவர்களும் , மட்டக்களப்பு மாவட்ட பந்து பேட்மிண்டன் பயிற்சியாளரும் பந்து பேட்மிண்டன் தேசிய சம்மேளனத்தின் தரம் 3 நடுவருமான MMM.அஷ்பாக் அவர்களும் காணப்பட்டனர்..

இப்போட்டி நிகழ்வில் ASSPEK A அணி சார்பாக FM.பைஷான்,MRM. ஷனப்,MHM. அக்தாஸ்(C),HM.அப்னான் ஸர்,HMA.ரிபாத், UM. சாஜித்,SA. ரஹ்மான்,ALM. நஸீம் ஆகியோரும்,
ASSPEK B அணி சார்பாக MBM. நஜாத்,MF. அல் அமீன்,AMA. ஸஹீர் கான்,MM. மக்காரிம்,MU. ஆசாத்,MNM. நதீர்,JM. ஆஷிம் ஆகியோரும் பங்குபற்றி இச் சாதனையை அகில இலங்கை ரீதியில் நிலைநாட்டியுள்ளனர்…

Recommended For You

About the Author: webeditor