கொலம்பியாவில் மண்சரிவினால் பஸ் மற்றும் வேறு சில வாகனங்கள் மண்ணில் புதைந்ததால் குறைந்தபட்சம் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரசேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவங்கள் கொலம்பியாவின் வட பிராந்தியத்திலுள்ள நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
காலி எனும் நகரில் பஸ் ஒன்று மண்சரிவில் சிக்கியது. இதனால் பஸ்ஸிலிருந்த 25 பயணிகளில் பெரும்பலானோர் உயிரிழந்துள்ளனர்.
அதேசமயம் உயிரிழந்த பெண்ணொருவரின் கரங்களில் அணைத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் குழந்தையொன்று மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த அனர்த்தத்தில் வேறு வாகனங்களிலிருந்த சிலரும் மண்ணில் புதையுண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.