அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்படாததையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை. அந்த வருடம் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்தார்.
எனினும் கடந்த முதலாம் திகதி நிதியமைச்சில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், அங்கு இந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பரிசீலிப்பதாக அவர் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.