மாதாந்த லீசிங் கொடுப்பனவை செலுத்த தவறியவர்களின் வாகனங்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்ல எவ்வித அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்புடன் ஊடக சந்திப்பு
கொழும்பு என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஒன்றிணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எந்தவொரு ஊடக சந்திப்பும் இவ்வாறு நடத்தப்பட்டிருக்காது. விசேட பொலிஸ் பாதுகாப்பை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.
ஊடக சந்திப்பிற்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளப்பட்டமையானது, லீசிங் மாஃபியா எந்தளவிற்கு கொடூரமானது என்பதற்கு இதுவொரு உதாரணமாகும்.
அதிகாரம் இல்லை
லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறும் பட்சத்தில், அதனை சீசர்களுக்கு கொண்டு செல்ல சட்டத்தில் எந்தவித அதிகாரமும் கிடையாது.
அத்துடன் சுற்று நிரூபத்திலும் அவ்வாறான அதிகாரங்கள், சீசர்களுக்கு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.