இலங்கையிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களுக்கு மாபெரும் சூரிய தீப்பிழம்பேக் காரணம் என வானியல் வல்லுநர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
தீப்பிழம்பு சூரியனின் மேற்பரப்பில் 1.5 மில்லியன் கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது.
இதன் மூலம் பரவும் ஒளி ஆற்றல், அதிக மின்னூட்டம் கொண்ட சூரியக் காற்று மற்றும் பிற காஸ்மிக் கதிர்களால் பூமியைச் சுற்றியுள்ள வான் ஆலன் கதிர்வீச்சு வளையங்களைப் பாதித்து, அவற்றை சார்ஜ் செய்ய வைக்கிறது.
இதில் உருவாக்கும் வலுவான மின் சக்தி பூமியின் மேல் வளிமண்டலத்தை பாதிக்கிறது. கீழ் வளிமண்டலத்தை சீர்குலைக்கிறது.
இதன் காரணமாக தாழ்வான வளிமண்டலத்தின் அமைதி இழக்கப்பட்டு புயல்கள் உருவாகின்றன என அனுர சி. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.