இலங்கை சுற்றுலாத்துறை மேற்கொள்ளும் மற்றுமோர் திட்டம்!

தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதர ஒப்புக்கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் திட்டம்

சுற்றுலாத்துறையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வேல்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து 18 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான திட்டங்களை பற்றி விவாதிக்க டயானா கமகே விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டயானா கமகேவிற்கு அழைப்பு

இதற்கான அழைப்பு வேல்ட் டிஸ்னி நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான அலெக்ஸியா எஸ்.குவாட்ரானியினால் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள குவாட்ரானி, சரியான விபரங்களை வழங்க முடியவில்லை என்றாலும், முதலீடு 16-18 பில்லியன் டொலர் வரையில் இருக்கும்.

இது டொலர் நெருக்கடியைத் தணிக்க இலங்கைக்கு தேவையான நிதி உட்செலுத்தலை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor