பிரித்தானியாவின் சாகோஸ் தீவுகளில் உள்ள இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து பிரித்தானிய அரசு எடுத்துள்ள முடிவு!

பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவிக்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சாகோஸ் தீவுகளின் உரிமை தொடர்பில் குழப்பம்

இந்நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்களை இன்னொரு மூன்றாவது நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையே சாகோஸ் தீவுகளின் உரிமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக பிரித்தானிய அதிகாரிகள் இந்த அவசர தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor