மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சலி போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சிறுவர்களை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை
மேலும்,பிள்ளைகளுக்குக் காய்ச்சல், இருமல், தடுமல், சலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக பதிவாகி வரும் நிலையில், கோவிட் பரவல் முற்றாக நீங்கவில்லை என்றும், மக்கள் முறையான சுகாதாரப் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம் எனவும் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.