யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரு... Read more »
இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்களும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த போது கடந்த 14.10.2023 அன்று இரு இலங்கைப் பெண்கள்... Read more »
பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட 17 இலங்கையர்கள் வசித்து வருவதாக அந்த அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். இதில்... Read more »
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) நாட்டிலுள்ள மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு, தற்போது ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. அக்டோபர் 10 ஆம் திகதி... Read more »
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்... Read more »
காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப பாடசாலையில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சிறுமியின்... Read more »
இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தச் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இஸ்ரேல் மீண்டும்... Read more »
கனடாவில்,ஒன்றாரியோ மாகாணத்தில் மான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் மான் வேட்டையாடிய மூன்று பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்படாத வலயத்தில் குறித்த மூவரும் மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம்... Read more »
மின் கட்டணங்கள் தொடர்பான சமீபத்திய தரவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சார சபை மேற்கொண்ட அனுமானங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம்... Read more »
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும்... Read more »