யாழில் விசேட நடவடிக்கையில் ஈடுபடும் பொலிசார்!

யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் , வைத்திய அறிக்கை கிடைக்கப்பெற்றதும் , அவர்களை நீதிமன்றங்களில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள்... Read more »

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்!

யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய் பரவல் அதிகமானதையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ஆம் திகதி முழுநேர... Read more »
Ad Widget

ரயில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள புகையிரத கடவயில் வீதியை கடக்க... Read more »

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் வெங்காயத்தின் விலை!

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 650 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் பெரிய சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறான நிலையில், 1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை நாளைய தினம் 700... Read more »

சீரற்ற காலநிலையால் இன்றும் பல பாடசாலைகளுக்கு விடுமுறை!

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மாத்திரம்... Read more »

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் மழையுடனான வானிலை நாளை (20-12-2023) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.... Read more »

கொரொனோ தொற்று தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன் மூலம்,வைரஸ் நோய் தொற்றுக்கள் பலவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என... Read more »

இன்றைய ராசிபலன்கள் 20.12.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்... Read more »

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் மோசடி இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கொள்வனவு, வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அச்சிடல் விடயங்களில் கடந்த சில வருடங்களாக பாரிய ஊழல் இடம்பெற்று வருதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை... Read more »

கொழும்பு இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு!

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள இரவு விடுதியில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிரிபத்கொட... Read more »