மேலதிக வகுப்புகளுக்கு தடை

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை அறிவித்துள்ளது. Read more »

2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் : இந்தியா- பாகிஸ்தான் முறுகல்

2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற... Read more »
Ad Widget

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பெயர் அறிவிப்பு!

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும்... Read more »

தேசிய மக்கள் சக்தி ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் 16 பெண் பிரதிநிதிகள்!

பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது விசேட அம்சமாகும். அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி சார்பாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் 655,289 வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் செல்லவுள்ளார்.... Read more »

எம்.பி ஆகிறார் திலித் ஜயவீர

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சர்வஜன அதிகார உயர்பீட குழு தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவித்துள்ளது. Read more »

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியீடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள் பிமல் நிரோஷன் ரத்னாயக்க டொக்டர். அனுர கருணாதிலக்க உபாலி... Read more »

டெல்லி TO அமெரிக்காவுக்கு 40 நிமிடங்களில் செல்லலாம் – எலான் மஸ்க் திட்டம்

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும். இதன்மூலம் மக்கள் ஒரு நகரத்தில் இருந்து... Read more »

கல்முனையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு இருப்பது கவலையாக இருக்கின்றது : ரஹ்மத் மன்சூர்!

கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று தோற்கடிக்கப் பட்டிருக்கிறது அதேபோன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த அரசியல்வாதியை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது. அரசியல் என்றால் ஒரு பக்குவம் இருக்க வேண்டும் நாங்கள் எமது மேடைகளில் எவரையும் தாக்கி... Read more »

துப்புரவு தொழிலாளியை அச்சுறுத்தி 415 ரூபாவை கொள்ளையிட்ட 6 மாணவர்கள் கைது!

பாணந்துறை கடற்கரை துப்புரவு பணியாளர் ஒருவரின் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. பொதுக்கழிப்பறை அருகே 3... Read more »

புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்ன தேசியப்பட்டியல் எம்பிக்களாக ரவியும், தினேசும் !

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னணியிலிருந்து மூன்று எம்.பிக்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இருவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். இந்த முன்னணி ரவி... Read more »