யாழில் அரச காணிகளை அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு வழங்கத் தீர்மானம்

யாழ்.மாவட்டக் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அரச காணிகளை அபிவிருத்திச் செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு வழங்குதல் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் காணிகளைக் கையளித்தல்,... Read more »

பொதுக் கட்டமைப்பின் கீழ் நினைவேந்தல்? இன்று முக்கிய தீர்மானம்

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலை ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்கிச் சிறப்பாக நடத்துவது தொடர்பில் சமயத் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள்,... Read more »
Ad Widget

‘ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி’ உருவாக்கம் – நிர்வாகக் கட்டமைப்பும் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிப்பு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், ஈ.பி.டி.பி. கட்சியில் இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தினையும் வெளியிட்டனர். குறித்த இளைஞர்களின் ஆர்வத்தினை புரிந்து கொண்ட அமைச்சர்... Read more »

இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் வாராந்தச் சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள் (ரொறன்ரோ,... Read more »

சில வைத்தியசாலைகளில் சுகாதார உதவி பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது!

மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்கள் உணவுப் பொருட்களை விநியோகிப்போருக்கு சரியான முறையில் பணத்தை வழங்கவில்லை என்பதால்... Read more »

வீழ்ச்சியடைந்த கனேடிய டொலர்!

கனேடிய டொலர் பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக குறைந்த பெறுமதி இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இன்றைய தினம் கனேடிய டொலர் ஒன்றின் பெறுமதி ஒரு சந்தர்ப்பத்தில் 75.15 அமெரிக்க சதங்களாக காணப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர்... Read more »

கனடாவில் சரிவை நோக்கி செல்லும் வீட்டு விலைகள்!

கனடா வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துள்ள நிலையில், வீட்டு விலைகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. கனடாவில் பொருளாதார மந்தநிலைக்கு சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்துள்ள வேளையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் கனடாவில் சராசரியாக ஒரு வீட்டின் விலை 637,673... Read more »

இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைக்கு பண பரிசில்கள்

ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இலங்கை வலைபந்தாட்ட அணி வீராங்கனைகளுக்கு தலா இரண்டு மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கியுள்ளது. ஆசிய கிண்ணங்களை வென்ற இலங்கை கிரிக்கட் மற்றும் வலைபந்தாட்ட அணி வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்... Read more »

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தியா

இலங்கைக்கு இந்த ஆண்டு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆசிய அபிவிருத்தி வங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் ‘வெரிட் ரிசர்ச்’ என்ற ஆய்வு அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் இந்த... Read more »

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவிற்கு தடை!

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான... Read more »