தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... Read more »

யாழில் தலைக்கவசம் இன்றி பயணித்த இளைஞர்கள்: பொலிஸ் துரத்தியதில் விபத்து

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... Read more »
Ad Widget

அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை மக்களுக்கு வழங்க நடவடிக்கை

அரச அடுக்குமாடி குடியிருப்புகளின் வீட்டு உரிமையை மக்களுக்கு இலவசப் பத்திரங்கள் மூலம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள பிரச்சினைகளை... Read more »

அரச உத்தியோகத்தர்களின் விடுமுறையை குறைக்க யோசனை

அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விடுமுறை நாட்களை 10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. திறந்த மற்றும் பொறுப்பான... Read more »

பாராளுமன்ற ஊழியர்களுக்கான பயணசலுகை இரத்து

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பாராளுமன்றத்தின் அதிகப்படியான செலவினங்களை மட்டுப்படுத்த திறைசேரி தீர்மானித்துள்ளது. இதனால் லங்காம பேருந்துகளில் இலவச பயணத்திற்காக பாராளுமன்ற ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த (பஸ் பாஸ்) பயணசலுகைஅடுத்த வருடம் முதல் இரத்து செய்யப்படவுள்ளது. பேருந்து அனுமதிப்பத்திரத்துக்காக வருடாந்தம் எட்டு... Read more »

காலாவதியான பால்மா, ஐஸ்கிரிமை தேடி வாங்கும் விற்பனையாளர்கள்!

கொழும்பு புறக்கோட்டை ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள மொத்த விற்பனை நிலையங்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசேட சோதனை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, 825 கிலோ காலாவதியான பால் மா விற்பனைக்கு தயார் நிலையில் இருப்பது... Read more »

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரியங்கா காந்தி நீக்கம்

உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவும் காங்கிரஸ் அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக... Read more »

மதுபானசாலைகள் பூட்டு: சுற்றுலா ஹோட்டல்களுக்கு அனுமதி

எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளது. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை... Read more »

மியான்மர் சிறையில் இலங்கை மீனவர்கள்

மியான்மரின் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை வழக்கு எதுவும் இன்றி விரைவாக விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். அதற்காக மியான்மர் உள்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தூதுவர் ஜனக பண்டார கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

அமெரிக்காவில் இந்து ஆலயம் மீது தாக்குதல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்து ஆலயம் ஒன்றினை இந்திய எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் சார்பு ஆதரவாளர்கள் தேசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள சுவாமிநாராயண் கோவிலின் வெளிப்புறச் சுவர்கள் ‘இந்து எதிர்ப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரானவர்களால்’ சிதைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக... Read more »