நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை மாற்றத்தால் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
வழங்கப்பட்ட தரவுகளின்படி 61,391 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
மேலும் இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர கருத்து வெளியிட்டிருப்பதாவது, “தற்போதைய பருவமழையால், நுளம்புகள் பெருகும் இடங்களில் தண்ணீர் தேங்கி மீண்டும் நுளம்புகள் பெருகுவதை நாங்கள் காண்கிறோம்.
2019ஆம் ஆண்டில், 100,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 9 – 10 மாதங்களில் இந்த ஆண்டு அதே மாதிரியான வழக்குகளை நாங்கள் காண்கின்றோம். அதேபோன்று எதிர்காலத்திலும் அதிகரிக்கும்.பெரிய அதிகரிப்பை எதிர்பார்க்கிறோம்.
இந்நேரத்தில் கொழும்பு மாநகரசபை உட்பட 31 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை அதிக ஆபத்துள்ளவையாக இனங்கண்டுள்ளோம்.
10 அபாய வலயங்களே உள்ளன. ஏனைய மாகாணங்களில், மிக முக்கியமான விஷயம் உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் இருந்தால், மருத்துவரை சந்திக்கவும்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.