தீபாவளிக்கு முற்ப்பணம் கிடைக்காமையால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள்

தீபாவளி முற்பணம் ரூபா 15000 ரூபா தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த நிலையில் அவை இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்து மலையக தோட்டத் தொழிலாளர்கள் போராட்ட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அத்தொகையை வழங்காமல் 5000 ரூபா அல்லது பத்தாயிரம் ரூபா என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக இன்று அறிவித்ததை அடுத்து 150இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரம் போராட்டம்
சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தொழிலாளர்கள் பணிகளையும் புறக்கணித்து வீடு திரும்பினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், தாம் முறையாக வேலை செய்தோம் , மேலும் எமக்கு வழங்கப்படும் முற்பணம் மாத சம்பளத்தில் அறவிடப்படும்.

பெருந்தோட்ட கம்பனிகள் 15 ஆயிரம் ரூபா தருவதாக கூறியிருந்த போதிலும் எமது தோட்ட நிர்வாகம் அதனை வழங்க முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தனர்.

நாட்டில் விலைவாசி அதிகரிப்பு பொருளாதார பிரச்சினைகள் இருக்கும் போது எவ்வாறு தீபாவளியை கொண்டாட முடியும்.

எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக தீபாவளி முற்பணத்தை முறையாக வழங்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தாம் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போம் எனவும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எச்சரித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor