குழந்தை பெற்றுக்கொள்வதை குறைத்து கொள்ள சொல்லும் ஜனாதிபதி!

கிழக்கு ஆபிரிக்கா நாடான டான்ஸானியாவில் (Tanzania) கடந்த சில வருடங்களாக குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள அந்நாட்டின் ஜனாதிபதி சமியா சுலுஹு ஹசான் (Samia Suluhu Hassan)” டான்ஸானியாவில் உள்ள கேடா (Geita) நகரில் மட்டும் ஒரு சுகாதார மையத்தில் மாதத்திற்கு 1,000 குழந்தைகள் பிறக்கின்றன.

இவ்வாறு குழந்தைப் பிறப்பு அதிகரித்துக்கொண்டே சென்றால் இன்னும் மூன்று ஆண்டுகளில் உணவு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பது சிரமமாகி விடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”டான்ஸானியாவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 5 குழந்தைகள் பிறப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

எனவே மக்கள் இதனைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வதைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என ஜனாதிபதி சமியா சுலுஹு ஹசான் (Samia Suluhu Hassan) தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor